யாழ்ப்பாணம்: குளத்தை சுற்றி சிங்கள பெளத்த வர்ணம்- மக்கள் குற்றச்சாட்டு

249 Views

FB IM யாழ்ப்பாணம்: குளத்தை சுற்றி சிங்கள பெளத்த வர்ணம்- மக்கள் குற்றச்சாட்டு

யாழ் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான குளத்தை சுற்றி சிங்கள பெளத்த வர்ணத்தை   ஒத்த வகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உடனடியாக அந்த வேலை திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

இதன்போது, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டு இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற குளத்தில் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு வர்ண நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply