கிழக்கு பல்கலை ஊழியர் சங்கம் மௌன தொழிற்சங்கப் போராட்டம்

303 Views

மௌன தொழிற்சங்கப் போராட்டம்

மௌன தொழிற்சங்கப் போராட்டம்: கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உள்ள வளாகங்களுக்கு முன்பாக இன்று   தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனொரு கட்டமாக மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களுக்கு முன்பாக இன்று  இந்த போராட்டம் இடம்பெற்றது.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் மட்டக்களப்பில் உள்ள சௌக்கிய விஞ்ஞான பீடத்திற்கு முன்பாகவும் கல்லடி, நாவற்குடா சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாகவும் இந்த அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad கிழக்கு பல்கலை ஊழியர் சங்கம் மௌன தொழிற்சங்கப் போராட்டம்

Leave a Reply