புத்தளத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

புத்தளத்தில் இடம்பெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கை(Photos) | Signature Gathering Activity At Puttalam Too

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் இன்றைய தினம் புத்தளத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.