யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலை

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. ஏ.ஆர்.வி, ஏ.ஆர்.எஸ் போன்ற மருந்துகளுக்கு மிகப் பெரும் தட்டுப்பாடு நிலையில் காணப்படுகின்றதென என தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி. ஹரிகரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பல மைல் தூரத்தில் இருந்தும் வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிரமத்திற்கு மத்தியில் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றார்கள்.

இந்நிலையில் வைத்தியசாலையில் மருந்து இல்லாத போது பல்வேறுபட்ட இடர்பாடுகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. இதற்கு அரசாங்கம் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. ஏ.ஆர்.வி, ஏ.ஆர்.எஸ் போன்ற மருந்துகளுக்கு மிகப் பெரும் தட்டுப்பாடு நிலையில் காணப்படுகின்றது.

யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள் உள்ளிட்ட நெருக்கடி நிலைகள் தொடர்பாகவும், வைத்தியசாலைகளுக்கான மருந்துவிநியோக தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூட்டமொன்றை நடத்திய போது பொறுப்பான அதிகாரி ஒருவர் போதியளவு தடுப்பு மருந்துகளை வைத்துள்ளோம் என்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு அதனை அனுப்பி வருவதாகவும் கூறினார்.

தற்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையில் பெரும்பாலான மருந்துகள் தீர்ந்துவிட்டது. நாய் கடித்தால் உயிருக்கு கூட ஆபத்து வரும் நிலைமை காணப்படுகின்றது என்றார்.

Tamil News