அமெரிக்க பள்ளியில் ஒன்றில் துப்பாக்கி சூடு: 18 குழந்தைகள் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

155 Views

அமெரிக்க பள்ளியில் ஒன்றில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 21பேர்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்தியவர் “இந்த சம்பவதின் போது தனியாகச் செயல்பட்டார்” என்றும் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இரங்கல் தெரிவித்து உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். “ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர். இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்” என்றார்.

Tamil News

Leave a Reply