அமைச்சுப் பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு! மைத்திரி தலைமையிலான கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்

அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு


நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கி இடைக்கால அரசு அமைக்கப்படா விட்டால், அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசிலிருந்து வெளியேறுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை தொடக்கம் இரவு வரை கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Tamil News