சவுதியிடம் அணு ஆயுதங்கள் – ஈரான் எச்சரிக்கை

சவுதி அரேபியா அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது, அமெரிக்காவும் அதை முழுமையாக அறிந்திருக்கிறது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தளபதி ஹுசைன் கனானி இந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணணலில் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு  மத்தியில்,  ஒரு பிரத்தியேக நேர்காணலில் போது உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நேரத்தில், சவுதி அரேபியாவிடம் அணு குண்டு உள்ளது மற்றும் அதை இஸ்ரேலும் அமெரிக்காவும் முழுமையாக அறிந்திருக்கின்றன. ஈரானில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை இஸ்ரேலின் மொசாட் மற்றும் CIA உள்ளிட்ட வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. அரசாங் கத்தை கவிழ்ப்பது மட்டுமல்ல, ஈரானை முழுவது மாக உடைப்பதே அவர்களின் நோக்கம்.
அமெரிக்கத் தாக்குதல் சமச்சீரற்ற ஈரானின் பதில் தாக்குதலை தூண்டக்கூடும். “வாஷிங்டன் தாக்கினால், தெஹ்ரானின் முதல் நடவடிக்கை அமெரிக்கத் தளங்களை நேரடியாக குறிவைக்காது. அதற்கு பதிலாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்படலாம். முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான  மூடக்கூடும். சீனா அல்லது ரஷ்யாவின் பொருளாதாரங்களுக்கு தீங்கு விளைவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இது தவிர்க்க முடியாததாக இருக்கலாம்” என்று கனானி கூறினார்.