வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்

sarath 1 வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் - பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்சஜித் பிரேமதாசவுடன் நிலவும் முரண்பாடுகளின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் தலைமை தாங்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் எழுதிய புத்தகத்தை வெளியிடவுள்ளதாகவும் இதன் மூலம் இதற்கு முன்னர் வெளிவந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் கமல் குணரத்ன ஆகியோரின் புத்தகங்களிலுள்ள பல விடயங்கள் பொய்யென நிரூபிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, சஜித் பிரேமதாச போன்றவர்கள் பற்றிய பல உண்மைகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாசவுடன் நிலவி வரும் அரசியல் முரண்பாடே இந்த புத்தகம் விரைவாக வெளிவருவதற்கு முதன்மையான காரணம் எனவும் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்தின் கீழ் அக்கட்சியின் பல உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வைக்கும் திட்டம் இருப்பதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டு அவரைச் சுற்றி பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி பெரும் பலம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக சி.ஏ.சந்திர பிரேமா எழுதியுள்ள “கோட்டாவின் போர்’ என்ற நூலில் உள்ள பல விடயங்களும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவால் வெளியிடப்பட்ட “ரோட் ரு நந்திக்கடல்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.