மட்டக்களப்பு சந்தனமடு ஆற்றில் மணல் கொள்ளை

161 Views

சந்தனமடு ஆற்றில் மணல் கொள்ளை


மட்டக்களப்பு செங்கலடி
செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும்,  இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டு வருவதாகவும்  தெரிவித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
.

குறித்த ஆற்றில் 2015ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரைக்குமான காலப்பகுதியில் மணல் அகழ்வு முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது.

வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சித்தாண்டி சந்தனமடு ஆற்றில் பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவித்து ஏறாவூர் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணல் அழ்வை தடுக்க வேண்டும் எனத் தொரிவித்து அக்காலப் பகுதியில் 11 இளைஞர்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிதம் கூட இருந்து மணல் அகழ்வை முற்று முழுதாக நிறுத்தினர்.

சென்ற ஜூன் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் சித்தாண்டி புதுவழி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சந்தனமடு ஊடாக இரண்டு கிலோமீட்டர் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது குறித்த வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் வீதி அபிவிருத்திக்கு தேவையான மணலை இரவு வேளையில் சுமார் 300 கீப் அளவிலான 7 மணல் குவியல்களாக குவிக்கப்பட்டு பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றிருக்கின்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பலர் தெரிவிக்கின்றார்கள்.

குறித்த வீதியின் அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக இந்த மணல் அகழ்வு இரவோடிரவாக அப்பகுதியில் இருந்து அகழப்பட்டிருப்பதாக பொது அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply