ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது கண்மூடித் தனமாக போர் தொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.