இலங்கை மக்களுக்கு  ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு ரஷ்ய அதிபர் அனுதாபம் தெரிவிப்பு

பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்களுக்கு  ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்து ரஷ்ய  அதிபர் விளாடிமிர் புடின், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ரஷ்ய தூதரகத்தின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

“உங்கள் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு எனது  ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

அத்தோடு “உயிழிந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபத்தையும்  ஆதரவையும் தெரிவிக்குமாறும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும்” அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.