ரஷ்யா-இலங்கை உறவுகள் எப்பொழுதும் நட்புறவைக் கொண்டவை- ரஷ்யா அதிபர்

69 Views

ரஷ்யா-இலங்கை உறவுகள் எப்பொழுதும் நட்புறவைக் கொண்டவை என்று கூறியுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், இலங்கை மற்றும் ரஷ்யாவின் மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் வாழ்த்துக்களை ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் தூதுவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர், ஜனாதிபதி ரணிலுக்கு தனது வாழ்த்துச் செய்தியின் மூலம் தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply