கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா

உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும்  ஆளில்லா விமானங்கள் மூலம்  தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மற்றும் மின் பகிர்வு மையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை ஆரம்பித்தது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா  தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்வதால், தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர்காலத்தில் மின் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். உக்ரைனுக்கு உளவியல் ரீதியான நெருக்கடியை அதிகரிப்பதற்காக ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.