ரஸ்ய விமானம் தடுத்துவைப்பு: இலங்கைத் துாதுவரை அழைத்து கண்டனத்தை பதிவு செய்த ரஸ்யா

ரஸ்ய விமானம் தடுத்துவைப்பு

ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தினை இலங்கை தடுத்து வைத்துள்ளமை குறித்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் திகதி ரஸ்யாவிற்கான ஏரோஃப்ளோட் விமானத்தை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்க வேண்டும் என நீதி மன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து இலங்கை துாதுவரிடம் வெளிவிவகார அமைச்சு தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் தங்களது விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள ரஷ்யாவின் Aeroflot விமான சேவை, இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை இடைநிறுத்துவதாகவும், அனைத்து விமான பயணச்சீட்டு விநியோகத்தையும் இடைநிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக  தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானத்தின் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ஏரோஃப்ளோட்  நிறுவனம் அறிவித்துள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மொஸ்கோவில் இருந்து வந்த குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News