அதிகரிக்கும் பதற்றம்- தாய்வான் எல்லையைக் கடந்த சீனாவின் கப்பல்கள், விமானங்கள்

சீனாவின் விமானங்களும், கப்பல்களும் தாய்வானின் கடல் எல்லையைக் கடந்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது தைவான்.

ஏவுகணை அமைப்புகளை தாய்வான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது.

எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தாய்வானைச் சுற்றி சீனக் கப்பல்களும் விமானங்களும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.