இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்று

இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன்

இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் வைரஸ் திரிபுடன் இது வரையில் 45 தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இதையடுத்து இது வரையில் இலங்கையில் 45 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில்,  40 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Tamil News