இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயளர்கள்-இதுவரை 24,523 பேர் பாதிப்பு

348 Views

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயளர்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 24,523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர்களில் 6,483 பேர் மே மாதத்தில் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 01ம் திகதி மாத்திரம் 313 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கண்டி, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply