இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல்; இவ்வாரம் தொற்றாளர் எண்ணிக்கை 30 சதவீதத்தினால் அதிகரிப்பு!

409 Views

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: இலங்கையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பதிவான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு முழுமையாக தடுப்பு செலுத்திக் கொள்ளாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply