சிங்கப்பூர்-முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யக் கோரிக்கை

99 Views

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி சர்வதேச அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அவரின் செயற்பாடுகள் குறித்த இதில் குற்றம் சாட்டப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  உள்நாட்டுப் போரின் போது செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்யுமாறு கோரி தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) (International Truth and Justice Project)என்ற மனித உரிமை அமைப்பு  சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, ​​அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறியதாக முறைப்பாட்டைத் தாக்கல் செய்த “சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்” என்ற குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply