இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனை மீள ஆரம்பம்

 பி.சி.ஆர் பரிசோதனை மீள ஆரம்பம் பி.சி.ஆர் பரிசோதனை மீள ஆரம்பம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடை நிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கொவிட் 19 பரவல் அதிகரித்து வரும் நிலையில், பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து மூன்று பேர் பல்கலைக்கழகத்தின் நிதி மூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொவிட் 19 பி. சி. ஆர். ஆய்வு கூடத்தில் பணியாற்றி வந்த 4 மருத்துவ ஆய்வு கூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதனால், பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மருத்துவ பீடத்தில் பி. சி. ஆர் பரிசோதனைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. இதனையடுத்து உடனடியாக ஒப்பந்த அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆளணியை உள்வாங்குவதற்குத் துணைவேந்தர் பணித்திருந்தார்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் மூலம் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதனால், விரைவில் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021