அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் சாதாரண விடயமல்ல

Lakshman Kiriella அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் சாதாரண விடயமல்லவடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்து விடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இஸ்ரேல் எனும் நாடு எவ்வாறு உருவான விதத்தை நினைவில் கொண்டு இந்த விடயத் தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

மேலும் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிப தியிடம் வழங்கி விட்டு, நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சுயாதீனம் குறித்து இங்கு விவா தித்து எந்தவொரு பலனும் கிடையாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் இல்லாது செய்தமையால் இன்று சர்வ தேசத்தின் பகையை சம்பாதித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் சாதாரண விடயமல்ல

Leave a Reply