முன்மொழியப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 2023.06.26 தொடக்கம் 2023.06.28 வரை கொழும்பில் நடாத்தப்பட்டுள்ளது.
சுங்க ஒத்துழைப்புக்கள் மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல்கள், பொருளாதார ஒத்துழைப்புக்களைப் போலவே சுகாதார முறைகள் மற்றும் தாவரச் சுகாதார முறைகள் போன்ற அத்தியாயங்கள் இக்கலந்துரையாடலில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் பற்றிய செயற்பாட்டுத் திட்டத்திற்கமைவாக 2024 பெப்ரவரி மாதம் குறித்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கும், 2024 மார்ச் மாதமளவில் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் குறிப்பிட்டு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.