சீனாவிடமிருந்து கிடைத்த எரிபொருள் தொகையை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்க தீர்மானம்

182 Views

சீன அரசாங்கத்திடமிருந்து கிடைத்த எரிபொருள் தொகையை ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக நெற்செய்கை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய, சீன அரசாங்கத்திடமிருந்து 10.06 மில்லியன் லீட்டர் எரிபொருள் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அந்த தொகையில் 6.98 மில்லியன் லீட்டர் எரிபொருள் விவசாயிகளுக்கும் மற்றைய தொகை எரிபொருள் மீனவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

Leave a Reply