திருகோணமலை: குழாய் நீரை சேமித்து பயன்படுத்துங்கள் மக்களிடம் கோரிக்கை

குழாய் நீரை சேமித்து பயன்படுத்துங்கள்

குழாய் நீரை சேமித்து பயன்படுத்துங்கள்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் குழாய் நீரானது தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அடிக்கடி தொடர் மின்வெட்டுக்களால் போதியளவான நீரை மக்களுக்கு வழங்க முடியாதுள்ளதால் நீர் வருகின்ற தருணத்தில் நீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெயந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (30) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மூதூர்,ஈச்சிலம்பற்று, கந்தளாய், புல்மோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான நீர் திட்டம் ஊடான சேவை எரிபொருள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் எதிர்காலத்திலும் நீர் சேவையை வழங்க சிக்கனமாக பாவனை செய்யுமாறும் பொது மக்களை மேலும் கேட்டுள்ளார்.