யாழ். மாவட்டத்திற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கை

யாழ். மாவட்டத்திற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கையிட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு இந்த ஆண்டின் இதுவரையான நாட்களிற்கு ஒரு கோடியே 26 இலட்சத்து 75 ஆயிரம் லீற்றர் டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாவட்ட அரச அதிபருக்கு அறிக்கையிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் காரணமாக இடம்பெறும் நெருக்கடிகளின் மத்தியிலும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அனுமதி பெற்ற 45 எரிபொருள் விற்பனை நிலையத்திற்கும் ஐனவரி முதலாம் திகதி முதல் ஏப்பிரல் 20 ஆம் திகதிவரையான விநியோகமே இந்த அளவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தக் காலத்தில் டீசல் சாதாரணம் மற்றும் சுப்ப டீசலாக ஒரு கோடியே 26 இலட்சத்து 75 ஆயிரத்து 100 லீற்றரும், மண்ணெண்ணை 66 இலட்சத்து 92 ஆயிரத்து 400 லீற்றரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு கோடியே 28 இலட்சத்து 7 ஆயிரத்து 300 லீற்றர் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஐ.ஓ.சி நிறுவன விநியோக அளவு இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil News