கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு -பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தினர்

380 Views

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு

அமெரிக்காவின் படைப்பிரிவில் ஒன்றான மரைன் படைப்பிரிவில் 100க்கும் மேற்பட்டவர்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 அமெரிக்காவின் படைப்பிரிவில் ஒன்றான மரைன் கார்ப்ஸ் நவம்பர் 28ஆம் திகதிக்குள் பணியிலுள்ள துருப்புகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் அப் படைப்பிரிவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்துள்ளதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

100-க்கும் மேற்பட்ட மரைன் துருப்பினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை மரைன் கார்ப்ஸ் படைப்பிரிவிலிருந்து வெளியான அறிக்கையில், இதுவரை 103 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மரைன் பிரிவில் 95% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 1,007 பேருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் இதுவரை ஆறு உயர் அதிகாரிகள் (அதில் இரு பட்டாலியன் கமாண்டர்களும் அடக்கம்) தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்ததால் பணியிலிருந்து விடுவிக்கபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை   குறிப்பிடத்தக்கது.

Leave a Reply