இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி செல்லும் அகதிகள்

150 Views

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகளாக மக்கள் சென்றுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் 1 ஆண் , 2 பெண்கள் 3, குழந்தைகள் அடங்கிய இலங்கை தமிழர்கள் 06 பேரை இறக்கி விட்டு படகு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG 20220322 WA0006 இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி செல்லும் அகதிகள்

சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவல் படையினர் குறித்த நபர்களை  மீட்டு வரவுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பம் இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் இது வரையில் வெளியாகவில்லை.

Leave a Reply