வவுனியா-காட்டுப்பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு

352 Views

மர்மமான முறையில் கொலை

இலங்கையில் 9 வயதான சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி ஓரிரு தினங்களில், மற்றுமொரு சிறுமியின் சடலம் வவுனியா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – கணேசபுரம் பகுதியிலிருந்து 16 வயதான சிறுமியின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில், குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கைகளை உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.  குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப்பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் கொலை

களுத்துறை – பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கடந்த 28ம் தேதி 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் கொலை

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா மற்றும் திருகோணமலையில், படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்கு நீதி கோரி  பெண்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply