7 ஆயிரம் பேரை விடுவித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்- தலிபான்கள் நிபந்தனை

17728026w 780x470 1 7 ஆயிரம் பேரை விடுவித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்- தலிபான்கள் நிபந்தனைஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்துள்ள தலிபான்கள், ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என  நிபந்தனை விதித்துள்ளனர்.

இது ‘மிகப் பெரிய கோரிக்கை’ என ஆப்கானிஸ்தான் அரசின் பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவர் நதீர் நதீரி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே போன்ற தொரு சூழலில் சுமார் 5 ஆயிரம் தலிபான் கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அது ஆப்கானிஸ்தானிய அரசுக்கு பெருஞ்சிக்கலாக அமைந்ததாக கூறப்படுகின்றது. ஆனாலும் தலிபான்களின் நிபந்தனைகளுக்கு அரசு இதுவரையில் எந்தக் கருத்தையும் வெளியிட வில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி யிருக்கும் நிலையில், பல முக்கியப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி யுள்ளதோடு பல்வேறு இடங்களில் முன்னேறியும் வருகின்றனர்.

தற்போது போர் நிறுத்தத்துக்கு தலிபான்கள் முன்வந்திருக்கின்ற போதும்  தாக்குதல்கள்  தொடர்ந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு மூன்று மாத போர் நிறுத்தத்திற்கு முன் வந்திருக்கும் தலிபான்கள், சிறை வைக்கப்பட்டுள்ள சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என  நிபந்தனை விதித்ததோடு வேறொரு முக்கியமான நிபந்தனையையும் விதித்துள்ளனர். அதாவது தங்களது இயக்கத்தின் பெயரை அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 7 ஆயிரம் பேரை விடுவித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்- தலிபான்கள் நிபந்தனை