748 Views
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர் மற்றும் காஷ்மீரிகள் குழுக்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்ததாக, இந்தியாவைச் சேர்ந்த மன்மோகன் மற்றும் அவருடைய மனைவி கன்வல்ஜித் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான, ‘RAW’வுக்காக அவர்கள் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், தலா, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.