ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க

377 Views

கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்றுமுன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

நாட்டில் ஏற்பபட்டுள்ள நெருக்கடி நிலையின் தொடராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து புதிய பிரதமரை தெரிவு செய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிலையில் ஒரே ஒரு உறுப்பினர் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 73 வயதான ரணில் விக்ரமசிங்க 06 ஆவது முறையாக பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னதாக, சஜித் பிரேமதாசாவை பிரதமர் பதவி ஏற்க வறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், ஜனாதிபதி பதவி விலகினால், அந்த வாய்ப்பை ஏற்பதாக சஜித் கூறியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதி வழங்கியிருந்த அவகாசம் காலாவதியான நிலையில், நியமன உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இலங்கை பிரதமராகியிருக்கிறார்.

அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில், 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தலைவராகவும் 1994, 2001, 2004, 2015 ஆகிய ஆண்டுகில் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கிறார் ரணில்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் பலம் உளளது.

 

சஜித் பிரேமதாச, அனுரகுமார தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க எதிர்ப்புத்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். Tamil News

Leave a Reply