இலங்கையில் எதிர்வரும் 27ம் திகதி வரை மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் அண்மித்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மற்றும் இடைவெப்ப மண்டல ஒருங்கிணைப்பு வலயத்தின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கம் அதிளவான பலத்த மழை பதிவாகியுள்ளதுடன், இதன் தொடர்ச்சியாக மழை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தமான் தீவுகள் மற்றும் வங்களாவிரிகுடாவில் உருவாகவிருக்கும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியினால் ஆழ்கடல் மற்றும் பல நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அனைவரும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை எச்சரிக்கைகளைக் கூர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.