காஸா- எகிப்து இடையிலான ரஃபா எல்லை திறப்பு!

காஸா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை பாதை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எல்லைப்பாதை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. எகிப்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சில பாலத்தீனியர்கள் இந்த பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் ஐம்பது நோயாளிகளை மட்டுமே இந்த பாதை வழியாக பயணிக்க அனுமதிக்கும். இதனுடன், ஒவ்வொரு நோயாளியுடனும் அதிகபட்சம் இரண்டு பேர் போகலாம், மேலும் அவர்கள் எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதை மீண்டும் திறப்பது, டிரம்பின் காஸா போர்நிறுத்த திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.