புதிய சட்டம் அமுலாகும்வரை மாகாணத் தேர்தல் நடக்காது! திட்டவட்டமாக அறிவித்தது அரசு

மாகாணத் தேர்தல் நடக்காது
“புதிய சட்டம் அமுலாகும்வரையில் மாகாணத் தேர்தல் நடக்காது. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார் தேர்தல் முறை தொடர்பில் திருத்தங்களை மேற் கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயல் குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

வேண்டாம் என்று கூறும் போதே மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் தவறான சட்டவரைவொன்றுக்கு கையை உயர்த்தி ஆதரவளித்தன என்றும், மாகாணசபை சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டுமெனில் புதிதாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டத்துக்கு தவறான முறையில் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் அதனை முழுமையாக இரத்து செய்ய வேண்டி ஏற்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tamil News