357 Views
2022 ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படும்.
இதன்மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் உருவாக்கப்படும்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை” என்றார்.