இலங்கை :கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தி மாத்தறை நகரில் இன்று இரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பெருமளவான மக்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மாத்தறை நகரில் ஒன்றுகூடி அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தி நாடுதழுவியதாக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 05 at 11.06.16 PM இலங்கை :கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

அத்துடன் வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிலரால் கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் இன்றைய தினம் (05) அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

IMG 20220405 WA0011 இலங்கை :கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

இலங்கையை பாதுகாக்க முன்வாருங்கள், அரசாங்கமே வெளியேறு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.

20220405 141221 இலங்கை :கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

அதே நேரம் திருமலையில் நேற்று இரவு வேளையில் வீதிக்கு இறங்கிய வைத்தியர்கள்,   மருந்தும் இல்லை. மருத்துவ உபகரணங்களும் இல்லை எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

277668202 952130355565842 2738641714458424904 n.jpg?stp=dst jpg s600x600& nc cat=107&ccb=1 5& nc sid=8bfeb9& nc ohc=Sr6XWuGJwGUAX8aFzrM& nc ht=scontent maa2 2 இலங்கை :கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்

பொருளாதார நெருக்கடியினால் நோயாளர்களுக்கு அவசியமான மருந்துப்பொருட்கள் இல்லையெனக்கூறி பதுளை போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர்.