413 Views
திருகோணமலையிலும் போராட்டம்
திருகோணமலை அபயபுர சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இன்று (04) காலை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பவற்றைச் சுட்டிகாட்டிய குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி “கோட்டா வெளியேறு” மக்களை வாழ விடு ராஜபக்ச பரம்பரை வெளியேறு போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.