187 Views
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க ” எனும் தொணிப் பொருளின்கீழ் திருகோணமலை -முற்றவெளி விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் வியாழக்கிழமை ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய இவ் கவனயீர்ப்பு போராட்டம், வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் நாளை செவ்வாய்கிழமை 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.