தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி  லண்டனில் போராட்டம்!

இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி  லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது.

உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமாகி பிரிட்டிஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி இந்த பேரணி செல்லவுள்ளது. இந்த பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக்கொள்வதற்கு உதவவேண்டிய கடப்பாடு பிரிட்டனிற்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஸ் பிரதமருக்கும் மன்னர் சார்ல்ஸ் உட்பட உயரதிகாரிகளிற்கும் கடிதமொன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். தேசிய விடுதலை என்பது எங்களின் வரலாற்றுக்கடமை.