இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ அமைப்புகள் திங்கட்கிழமை (12) காலை போராட்டத்தை முன்னேடுத்தார்கள். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியும், இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி கோராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி பேரணியாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை அடைந்த்தும் மாவட்ட சுயவகத்திற்குள் யாரும் நூழையவிடாது வாசலை முடதக்கி போரட்டத்தில் ஈடுபட்டதுடன் ஐனாதிபதிக்கான மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார்கள்.
போராட்டத்தில் மாவட்ட அரசாங்கதிபர் சம்பவ இடத்திற்கே வந்து மகஜரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாழ். இந்திய துணைத்துதுவரிடம் கையளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்துபேரை பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது.




