காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அம்பாறையில் போராட்டம்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம்  | Virakesari.lk

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (ஜன 30) காலை 10 மணியளவில் அம்பாறை திருக்கோவிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி கண்ணீருக்கு தடை விதிப்போரிடம் நல்லிணக்கத்தை  எதிர்பார்க்கலாமா வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி வேண்டும், எங்கள் குருதியை உறிஞ்சினாய்  எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய், 2இலட்சம் பிச்சை வேண்டாம் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி,காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் சமூ செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.