புதிய வரிக் கொள்கைகளுக்கு கிளிநொச்சியிலும் எதிர்ப்பு – சேவைகள் முடங்கின

147 Views

புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் சேவைகள் முடக்கம் (Photos) -  ONM Media

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற பணிபகிஷ்கரிப்பு போராட்டம் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

மேற்படி பணிபகிஷ்கரிப்பால் கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாகப் பூட்டப்பட்டிருந்ததுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை.மக்களுக்கு வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதேவேளை, மின்சார சபையின் அலுவலகமும் பூட்டப்பட்டது. அத்துடன், அவசர சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply