போராட்டங்கள் நடத்த தடை : மீறுவோர் கைது செய்யப்படுவர் – அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

sarath Weerasekara 300x200 1 போராட்டங்கள் நடத்த தடை : மீறுவோர் கைது செய்யப்படுவர் - அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப் பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில்  உரையாற்றிய அமைச்சர், எதிர்க் கட்சி தவறான தகவல்களை முன்வைத்து மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறது என்றும் அவர் சாடினார்.

மேலும் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடுதல் மற்றும் ஆர்பாட்டங்களை நடத்துதல் என்பவற்றை தடை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ்மா அதிபரால் அமுல் படுத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஆர்பாட்டக் காரர்களை தனிமைப் படுத்தலுக்கு அனுப்புவது அவர்களை சோதனைக்கு உட்படுத்துவது அல்லது வீட்டு தனிமைப் படுத்தலுக்கு அனுப்புவது ஆகியன பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப் படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 போராட்டங்கள் நடத்த தடை : மீறுவோர் கைது செய்யப்படுவர் - அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

Leave a Reply