ஐதீகத்தின் அடிப்படையில் விச ஜந்துக்களை ஆலய வளாகத்தில் விடுவதற்கு தடை

விச ஜந்துக்களை ஆலய வளாகத்தில் விடுவதற்கு தடை

விச ஜந்துக்களை ஆலய வளாகத்தில் விடுவதற்கு தடை: ஜதீகத்தின் அடிப்படையில் விச ஜந்துக்களை ஆலய வளாகத்தில் விடுவது தடை செய்யப்படும் என நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சிவா கெளசல்யா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபை  எல்லைக்குள் அமைந்துள்ள கோண்டாவில் இணுவில் காரைக்கால் சிவன் கோவிலை அண்மித்த பிரதேசத்தில் வாழும் பொது மக்களாகிய உங்கள் வீடுகளில்  அல்லது விவசாய தோட்டக் காணிகளில் நாகபாம்புகள் காணப்பட்டால் அவற்றை துரத்தவோ துன்புறுத்தவோ செய்யாது தொலைபேசிக்கு அழைப்பெடுத்து விபரங்கள் கூறுமிடத்து அவற்றை  பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்ற என்னால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  எனவே குறித்த விடயம் தொடார்பில் என்னைத் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றேன்” என சிவா கெளசல்யா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சிவா கெளசல்யா மேலும் தெரிவிக்கையில்,

“அண்மைய நாட்களாக பல நாக பாம்புகள் கோவிலை சூழ இருக்கும் குடிமனைகளுக்குள் நுழைந்துள்ளது. இதனால் பெரும் அச்ச நிலை காணப்படுகிறது. இந்த நிலைக்கு பொறுப்பற்ற சில பொது மக்களும் தான்  காரணம். தங்கள் வீடுகளுக்கு விச ஜந்துகள் வந்தால் அதை சிவன் கோவில் புற்றுக்குள் விடுவதற்காக  கொண்டு வந்து கோவிலின் வீதியில் விட்டு  செல்கிறார்கள்.

அவ்வாறான செயலை செய்பவர்கள் கோவிலின் அருகே வாழும் மக்களை சற்றும் சிந்திப்பதில்லை. இவ்வாறாக நீங்கள் செய்த காரியங்கள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது . இனி வருகின்ற காலங்களிலேனும் சமூக பொறுப்புள்ளவர்களாக வாழ முயற்சி செய்வோம்.

விசஜந்துகளை அவதானித்தால் உடனடியாக அழைத்து அவற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  அத்துடன் ஆலய சூழலில் அவற்றை கொண்டு வந்து விடுவது தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

குறித்த  விடயத்தில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர், நல்லூர் பிரதேச  சபை செயலாளர் ஆகியோரின் பங்களிப்புடன் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசர தேவைகளுக்கு- 0779507269  என்ற தொலைபேசி ண் மூலம்  தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021