ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : அமெரிக்கா

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ரஷ்யா – உக்ரைன் இடையிலான அமைதி திட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பேச்சுவார்த்தையாளர்களை சந்தித்த பின்னர், “இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது” என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் குழு உக்ரைனுக்கு செவிமடுப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.

யுக்ரேனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அமைதி திட்ட முன்மொழிவுகள் பற்றி கசிந்த தகவல்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தன, அவை ரஷ்யாவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டன. இதனை புதின் “ஒரு தீர்வுக்கான அடிப்படையாக” கூறி வரவேற்றார்.

யுக்ரேன் ஒரு “மிகவும் கடினமான தேர்வை” எதிர்கொள்கிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார். “கண்ணியத்தை இழக்கும் அபாயம்” அல்லது “ஒரு முக்கியமான கூட்டாளியை இழக்கும் அபாயம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.