வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் பல நாடுகளில் முடங்கின

98 Views

செயலிகள் பல நாடுகளில் முடங்கின
உலகின் பல நாடுகளில் 
இன்று இரவு 9.40 மணி முதல் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் பல நாடுகளில் முடங்கின.

இது குறித்த செய்தியை தமது ட்விட்டர் பக்க முகவரி மூலம் உறுதிப்படுத்தியுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், “பலருக்கு எங்களுடைய சேவை கிடைக்காமல் போனதை அறிந்துள்ளோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது பற்றிய தகவலை இங்கே பதிவிடுகிறோம்,” என்று கூறியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனமும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், தமது சேவையை வழங்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. இயல்புநிலை திரும்ப விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் நிறுவனம்,,”தற்போது கடினமான நேரத்தை எதிர்கொண்டுள்ளோம். தயவு செய்து பொறுத்திருங்கள். பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்,” என்று கூறியுள்ளது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply