பிரதமர் – இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்திப்பு

279 Views

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னதாக இலங்கைக்கான இந்திய தூதரகம்  தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்,’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply