இத்தாலி பயணமாகும் பிரதமர் மஹிந்த பாப்பரசரை சந்திக்கும் திட்டம் இல்லை

126 Views

இத்தாலி பயணமாகும் பிரதமர் மஹிந்த இத்தாலி பயணமாகும் பிரதமர் மஹிந்த, இத்தாலி விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமரின் ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வவிஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக்கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது” என இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இத்தாலி புறப்படவிருந்தனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply