பிரதமர் மகிந்த ராஸபக்சே பதவி விலகவுள்ளதாக தகவல்

மகிந்த ராஸபக்சே பதவி விலகவுள்ளதாக தகவல்

மகிந்த ராஸபக்சே பதவி விலகவுள்ளதாக தகவல்

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகவுள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் பதவி விலகுவார் என்று டெய்லிமிரர் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார் என்றும்  11 கட்சிகளின் உறுப்பினர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புதிதாக அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்க அமைச்சரவையில் தற்போது நிதியமைச்சராக உள்ள பஷில் ராஜபக்ஷ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனவின் பெயர் முன்மொழியப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப் படவில்லை என்றும் நிதியமைச்சராக  பஸில் ராஜபக்சேவிற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொிஜயப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

இந்நிலையில்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டின் ஸ்திரத் தனிமையினைக் கருத்தில் கொண்டு தான் பதவி விலகுவதாக அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.