ஈரானுடன் பேச்சுவார்த்தைக் குறித்து அதிபர் ட்ரம்ப் கருத்து

“அவர்களின் வான் பாதுகாப்பு, விமானப் படை, கடற்படை மற்றும் தலைமை தற்போது இல்லை. அவர்களுக்குப் பேச வேண்டும். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ எனக் கூறிவிட்டேன்,” என்று தனது ட்ரூத் சோசியல் பதிவில் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கூட   ஈரான் தன்னுடன் பேச விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஈரானின் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அலி லரிஜானி எக்ஸ் தளப் பதிவில், “நாங்கள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.